Thursday 3 April 2014

ஒப்பீடுகள்

                    
                        

             ஒப்பீடுகள்
* மற்றவர்களைப்பற்றியான நமது மதிப்பீடானது

   உண்மையில் பார்க்கப்போனால், நாம் பரவாயில்லை

   என்று நாமே திருப்தியடைவதற்கான ஒரு

   முயற்சியாகவே உள்ளது.
* மதிப்பீடுசெய்யும் நம்முடைய தொடர்பழக்கமானது,

   எல்லோரையும்  நம்மைவிடத்தாழ்வாக வைக்க நாம்

   எடுக்கும் முயற்சியேயன்றி வேறில்லை.
* மக்கள் தொடர்ந்து தங்களை மற்றவர்களுடன்

   ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பலர்

   அந்த ஒப்பீடுகளினால் மகிழ்ச்சியடைகிறார்கள்,

   பாதிக்கப்படுகிறார்கள். இரண்டிமே தேவையற்றதுதான்.


* யாம் யாவரும் நினைவில் நீங்காமல் கொள்ளவேண்டிய
   மாபெரும் உண்மை; யாரும் உங்களைவிட உயர்ந்தவரும்

   இல்லை. உங்களைவிடத்தாழ்ந்தவரும் இல்லை!

   ஏனென்றால் உங்களைப்போல நீங்கள் ஒருவர்மட்டுமே

   இருக்கிறீர்கள். இதை உணராதவர்களுக்கு எப்போதுமே

   பிரச்சினைதான்.

No comments:

Post a Comment

Total Pageviews