Saturday 12 April 2014

விடுதலை

                       

                                   விடுதலை
* ``ஒரு தீயபழக்கத்தை மாற்ற வேறொருபழக்கத்தை
   கைக்கொள்ளுதல் பலனளிக்காது. இரண்டுபழக்கங்களுமே
   ஒன்றின் இருஅம்சங்களே. முதல்பழக்கத்தினால்தானே
   இரண்டாவது பழக்கம் உருவெடுத்தது. முதல்பழக்கம்
   இல்லையென்றால், இரண்டாவதுக்கு இடம் ஏது?
   ஒருவிதத்தில் இரண்டாவது பழக்கம், முதல்பழக்கத்தின்
   வால் எனலாம். ஆகவே இப்பொழுது ஒருபழக்கத்திற்குப்
   பதிலாக இரண்டு பழக்கங்களாகக்கூடிவிட்டதே. ஒரு
   பழக்கத்திலிருந்து – அது நல்லதோ, கெட்டதோ – விடுபட
   எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே தொடர் சங்கிலிபோல்,
   பற்பல பழக்கங்களுக்கும் வழிகோலும். அதை எதிர்க்கும்
   எண்ணங்களிலிருந்து விடுபடுங்கள். அப்பொழுது என்ன
   நேருகின்றது? நம் உள்ளத்தால் அந்தப்பழக்கத்தை கவனிக்க
   முடிகிறது. இந்த புத்தி எந்தவித ஆவலுமின்றி பழக்கத்தை
   மட்டுமே ஆராய்கின்றது.  அந்தஆய்வே, அப்பழக்கத்தை
   அற்பமாக்கிவிடுகின்றது. இப்புத்தி இல்லையென்றால்,
   அப்பழக்கம், மேலும் பலபழக்கங்களை உற்பத்திசெய்ய
   ஆரம்பித்துவிடுகின்றது.’’  
                             -  ஹிப்னோஹீலர் -

No comments:

Post a Comment

Total Pageviews