Monday 10 September 2012

தன்னிலை





          காயமே இது மெய்யடா _ இதில்

          கண்ணும் கருத்தும் வையடா. 
          அஹிம்சை எனிமா   

          உன்மூலம் போகுமடா என்மூலம்
          வன்மூலம் போகுமடா என் உரைமூலம்    
          உன்மூலம் போகுமடா நீர்மூலம்
          அன்றில் நீ ஆவாய் நிர்மூலம். 
          மனச்சிக்கல் இல்லாமல்
          பொழுது முடியவேண்டும்.
          மலச்சிக்கல் இல்லாமல் 
                       பொழுது விடியவேண்டும்.

                                 சுவாமி பிரேம் பதஞ்சலி -9585516719

    

Sunday 9 September 2012

எண்ணங்கள்



   உங்கள் உள்ளார்ந்த அன்பினாலும், நம்பிக்கையினாலும் கடைபிடிக்கப்படாத பணிவு  அசிங்கமானதாகும்.’


  செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும்                 உடல் பருமனுக்குத்துணை.                   

 வாழும்போது இறந்துபோகிறவன்,                  இறந்தபின்னும் வாழ்கிறான்.

 

 மற்றவரைத்திருத்தத்துடிப்பது, நீ திருந்துவதைத் தள்ளிப்போடும். 

 

திருந்த விரும்பாதவரை வருந்தவிடலாம்.                       

                           தொகுப்பு

                         நிறுவனர்                           ஸ்ரீயோகாலயாஅறக்கட்டளை      

Saturday 8 September 2012

தியானம்

                                                               
      சிறுமுயற்ச்சி _ முறையானபயிற்ச்சி _ நிறைவானமகிழ்ச்சி                    

தியானம் என்பதற்க்கு  விளக்கம் கேட்ட  மாணவர்களிடம்
 குருகேட்டார்.  ” நீங்கள் இங்கு  எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள் ?”    

” மூன்றுவருடகாலமாக.”

குருஅதற்கு, “ நான் உங்கள் முகங்களைப்பார்த்ததாக நினைவேஇல்லையே ?” என்று ஆச்சரியமாகச்சொன்னார்.

இதைக்கேட்ட சீடர்கள் குழம்பிநின்றனர்.

மீண்டும் குரு சொன்னார். ‘’ நீங்கள் எத்தனை வருடமாய் இருக்கிறீர்கள் ? என்று நான்   கேட்கவில்லை. மாறாக, ‘’ நீங்கள்  ‘ இங்கே ‘ எத்தனை வருடமாய் இருக்கிறீர்கள் ?. என்பதுதான் என்கேள்வி ?.                                            

  இவ்விடத்திலே  ’’ இங்கே ’’ (இந்த கணம் ), ‘’ இப்பொழுது ’’ என்று , நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.’’  


’’ நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை, ‘’ இங்கே, இப்பொழுது ’’
 இருந்தீர்கள் என்று நினைவுபடுத்திப்பாருங்கள். சுமார் பத்து தடவைகூட     இருக்காது.! நீங்கள் ‘’ இங்கே, இப்பொழுது ‘’  உடலால் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள்மனம் ?. இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகப்படுத்துங்கள்.                                    இதுவே தியானம்.’’      
                                                                          ' ஓஷோவடிவேலன். ‘

Friday 7 September 2012

உணர்வு


                      மெய்ஞானம்   
     
      ” அறிவை அறிந்தோர் அன்பை மறவார்.

       பொருளை அறிந்தோர் புகழை விரும்பார்.

         கருவை அறிந்தோர் கடவுளை நாடார் 

      குருவை அறிந்தோர் குறையில்லாதோரே.”

                                                      சுவாமி பிரேம்பதஞ்சலி.

Monday 3 September 2012

எளிமை, புதுமை,முழுமை

எளிய முயற்சி, உரியபயிற்சி ,நிலையான மகிழ்ச்சி

எந்தப்பணியிலும் எதிர்காலம் இருப்பதில்லை
எதிர்காலம், பணியை மேற்கொள்ளும் 
பணியாளர் கையில்தான் இருக்கிறது.
 சத்யப்பிரியன்

Total Pageviews