Saturday 8 September 2012

தியானம்

                                                               
      சிறுமுயற்ச்சி _ முறையானபயிற்ச்சி _ நிறைவானமகிழ்ச்சி                    

தியானம் என்பதற்க்கு  விளக்கம் கேட்ட  மாணவர்களிடம்
 குருகேட்டார்.  ” நீங்கள் இங்கு  எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள் ?”    

” மூன்றுவருடகாலமாக.”

குருஅதற்கு, “ நான் உங்கள் முகங்களைப்பார்த்ததாக நினைவேஇல்லையே ?” என்று ஆச்சரியமாகச்சொன்னார்.

இதைக்கேட்ட சீடர்கள் குழம்பிநின்றனர்.

மீண்டும் குரு சொன்னார். ‘’ நீங்கள் எத்தனை வருடமாய் இருக்கிறீர்கள் ? என்று நான்   கேட்கவில்லை. மாறாக, ‘’ நீங்கள்  ‘ இங்கே ‘ எத்தனை வருடமாய் இருக்கிறீர்கள் ?. என்பதுதான் என்கேள்வி ?.                                            

  இவ்விடத்திலே  ’’ இங்கே ’’ (இந்த கணம் ), ‘’ இப்பொழுது ’’ என்று , நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.’’  


’’ நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை, ‘’ இங்கே, இப்பொழுது ’’
 இருந்தீர்கள் என்று நினைவுபடுத்திப்பாருங்கள். சுமார் பத்து தடவைகூட     இருக்காது.! நீங்கள் ‘’ இங்கே, இப்பொழுது ‘’  உடலால் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள்மனம் ?. இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகப்படுத்துங்கள்.                                    இதுவே தியானம்.’’      
                                                                          ' ஓஷோவடிவேலன். ‘

No comments:

Post a Comment

Total Pageviews