Monday 31 March 2014

உண்மை

                                             உண்மை 
   
    * நம் நம்பிக்கைகள் எதிர்மறையாகவே உள்ளதால் ,
          நம் நினைப்புகளும், நடப்புகளும்  எதிர்மாறாகவே 
          முடிகின்றது. மனத்தின் அடித்தளத்திற்குசென்று,
          அங்குமனதில்எழும்ஆசைகளையும்;மனதைக்
          கவ்விக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் 
          தனித்தனியே எடைபோட்டுப்பார்க்கும் வழி 
           இருந்தால் , ஆசையைவிட நம்பிக்கைதான் 
           மிகுந்துநிற்கும் என்பதை அறியமுடியும்.    
     *  நினைப்பு நல்லதாயிருந்தால், செயல் செம்மையாய் 
           இருக்கும்.
     *  மனவலிமையைப்பெற, சாதனையில் ஈடுபட்டு 
           வேதனையில்  விழுந்துவிடக்கூடாது. 

நம்பிக்கை


            
        நம்பிக்கை 
*நம்பிக்கை ஒருசக்திவாய்ந்த ஆயுதம். இதனை   
  சரியாகப்பிரயோகித்தால், உள்ளிருக்கும் சகல
  சக்தியும் ஜ்வாலித்தெழும். அதைப்பயன்படுத்தப்
  பக்குவம்தேவை. தெய்வம் என்பதும் நம்பிக்கைதான்.
  பசித்த வயிற்றில் உணவு தெய்வம்.
  பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்.
  கொட்டும்மழையில் கூரை தெய்வம்.
  கோடைவெயிலில் நிழலே தெய்வம்.
  ஆயாசமும் அசதியும் மிகுந்தகட்டத்தில்,
  சாய்ந்துகொள்ள ஒருதூண், வருத்தமும்,வேதனையும்
  மிகுந்தநேரத்தில், முகம்புதைக்க ஒருமடி ...
  என்றநோக்கில் தெய்வம் எனும் நம்பிக்கை
  வசதியான ஆறுதல். தெய்வம் பார்த்துக்கொள்ளும்
  என்று திண்ணையில்படுத்திருந்தால் தெருவே சிரித்துவிடும்.        
  எது நம்பிக்கையும் ஆறுதலும் தருகின்றதோ                        அதுவேதெய்வம்.
  கடவுள் இல்லை என்ற கொள்கையுடையோரும், சாதனைகள்
   புரிந்ததும், புரிவதும் தன்னம்பிக்கையினால்தான்.

-மெஸ்பிரெய்டிஸம்-

                          
                         
    -மெஸ்பிரெய்டிஸம்-

*ஹிப்னாடிஸம் ஒரு சர்வரோகநாசினி இல்லை.
ஆனால் அதைநாம் எவ்வளவுதூரம் மருத்துவத்திற்குப்
 பயன்படுத்தலாம் என்று உற்றுநோக்கினால், அதனால்
 ஆகாதென்று பிரிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை
 மிகக்குறைவாகவே இருக்கும்.
*ஹிப்னாடிஸம், தூக்கமுமில்லை விழிப்புமில்லை.
 ஆனால் அந்நிலை, தூக்கத்தின் சுகத்தையும்,
  விழிப்பின் உற்சாகத்தையும் ஒருங்கே தரவல்லது.
*கடந்தகால சம்பவங்கள் அனைத்தும், பிறந்தநாளில்
 இருந்து இன்றுவரை நடந்த வாழ்க்கைச்சம்பவங்கள்
 அனைத்தும், முழுமையாக ஆழ்மனதிலே பதிவாகியுள்ளன.
 (முற்பிறவிச்சம்பவங்களும்கூட) இவற்றினை, ஆழ்நிலை
 ஹிப்னோவல்லுனர் மூலமே, முழுமையாக வெளிக்கொணரஇயலும். 

நிதர்சனம்


                  

             நிதர்சனம்
    *பள்ளம்தான் மேட்டினைநிர்ணயிக்கின்றது.
         குள்ளம்தான் உயரத்தினைவடிவமைக்கின்றது.
         இல்லாததை இருப்பதுதான்காட்டுகின்றது.
    
    *பிரச்சனைகளை இப்படித்தான் அணுகவேண்டும்.
         எதுஇல்லை எனும்கேள்வியோடு, எதுஇருக்கிறது
         என்றும் பார்க்கத்தெரிந்தால், பலவீனங்களும்
         பலங்களும் பக்கத்தில்தெரியும். பிறகு பயணம்
         தொடர்வது எப்படியென்றும்புரியும். நம்பிக்கை,
         நிதானம்வளரும் – வாழ்க்கைமலரும்.
      
       * நாமாக ஒன்றை உருவாக்கிவிட்டுப்பிறகு
         அதைப்பார்க்கச்சகிக்கமுடியாமல், ஆறுமாதத்திற்கு
         ஒருமுறைமாற்றிக்கொண்டேஇருப்பதற்குப்பெயர்தான்            
           ‘ ஃபாஷன்
          


நிஜங்கள்

      

     உண்மைகள் 

* நூறு சதவிகிதம்யாராலும் கண்டுபிடிக்கமுடியாது

  என்கிற சமயத்தில், ஒருமனிதன் என்னசெய்கிறானோ...

   அதுதான் அவனது நிஜகுணம்.

* மதவெறிஎதையும் கலக்காமல் சிறந்தகல்வியை

 அளிப்பவரே நல்லகுரு. இல்லையென்றால்,

 புத்திசாலியான சாத்தான்களை உருவாக்கியபாவம்

     அவரைச்சேரும்.

* பட்டாம்பூச்சிகள், நேரத்தைநொடிகளால் கணக்கிடுகின்றன.

  மணிக்கணக்கில் அல்ல! எனவே அவை, “ நேரமில்லை

   நேரமில்லை’’ என்றுபுலம்புவதில்லை!    

* அடுத்தநாளை அருமையாகத்திட்டமிட ஆசைப்படுகிறீர்களா?

   அதற்கு ஒரேவழிதான்! இன்றைய வேலைகளைக்கொஞ்சமும்

   மிச்சம்வைக்காமல் இன்றே சிறப்பாக செய்துமுடியுங்கள்! 

Total Pageviews