Sunday 30 March 2014

ஹிப்னாடிஸம்



                மெஸ்மரிஸம் – ஹிப்னாடிஸம்    ( 2 )
*  ஹிப்னோஎன்ற கிரேக்கப்பதத்திற்கு, நித்திரை என்று பொருள்.
    ஹிப்னாடிஸநிலையில் இருப்பவர், உறங்குபவரைப்போலத்
    தோற்றமளிப்பதால் இப்பெயர்பெற்றது.
    சில பொருளுள்ள வார்த்தைகளை, இதமான கட்டளைஇடும்
    குரலில் திரும்பத்திரும்பச்சொல்லுதலை, உடல்தளர்வுநிலையில்
    மேற்கொண்டால், அதுவே ஹிப்னாடிஸம் எனப்படும்.   
* மெஸ்மரிஸத்தில், சிகிச்சைசெய்பவரின் உடல் சக்தியான
     பிராணன் நோயைக்குணப்படுத்துகின்றது. ஹிப்னாடிஸத்தில்,
     நோயாளியின் மேல்மனம், தூண்டுதல்வாசகங்களால் உறங்கிய
     பின், ஆழ்மனம் அந்த அடுத்தவாசகப்பொருளை அப்படியே
     நம்பிச்செயல்படுகின்றது. மனம் உடலை ஆளுகின்றது என்கிற
     உண்மையினை இதில் உணரலாம்.  
* மெஸ்மரிஸம் ‘ஒளியால் செயல்பட்டால், ஹிப்னாடிஸம்
     ஒலியால் செய்யப்படுகிறது.                      
* இங்கிலாந்தில் மான்செஸ்ட்டரைச்சேர்ந்த, ஜேம்ஸ்பிரெய்டு 
         (1795-1860)   என்பவரே, இக்கலையின்தந்தை     
                எனப்போற்றப்படுகின்றார்.

No comments:

Post a Comment

Total Pageviews