Monday 24 March 2014

இளமையில் தியானம்

    

   இளமையிலேயே தியானம் பழகுவோம்

* உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்திநிலை உள்ளது.

  அந்த சக்திநிலையை மேம்படுத்துவதற்காகத்தான் யோகா,

  தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன.


* மனிதன் தன் மூலசக்தியை உணர்வதற்காகவேதான் இந்த

  மேம்பாட்டுப்பயிற்சிமுறைகள் உதவுகின்றன. உள்நிலையில்          கவனம் செலுத்தி, உ(ய)ரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியும்.


* யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். விழிப்புணர்விற்கானவழிகாட்டி.     உள்நிலைநலவாழ்விற்கானஒருதொழில்நுட்பமாகயோகா                                                                                                                                                                                                    விளங்குகின்றது. மனிதன் தன் வாழ்வை (விழிப்புணர்வோடும், புரிதலோடும்) முழுமையாக வாழ உதவும் தொழில்நுட்பமே யோகா.   


* யோகா, தியானம் இவற்றை இளம்வயதிலேயே கற்றுக்கொண்டு தொடர்ந்தால், சீரான உடல்வளர்ச்சியும், மனமுதிர்ச்சியும்பெற்று, முதிர்காலங்களில் ஏற்படும் பலவகையான இன்னல்களைத்தவிர்க்கலாம். வாழ்க்கையைச்சுகிக்கலாம். இதுவே விளைவறிந்தவிழிப்பாகும்.
                 
     * நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை *  

No comments:

Post a Comment

Total Pageviews