Wednesday 30 April 2014

பால் . . ?

                 
                       பால் பரிபூரண உணவா?

*  மாட்டுப்பால் சத்தான உணவு,  நல்ல உணவு, பரிபூரண உணவு 
    என பல வருடங்களாக, பல தலைமுறைகளாக  சிபாரிசு 
    செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் 
    அடிப்படைத்தேவையாகவும் சிபாரிசு செய்யப்படுகிறது.
    எல்லோருடைய உணவிலும் ஓர் அங்கமாக காலங்காலமாய்
    இருக்கிறது. பால் பரிபூரண உணவு எனில் மனிதகுலம் ஏன்
   நோயினால் அவதிப்படவேண்டும்?  தீராத நோயினால் மாத்திரையே
   கதி என்ற இழிநிலை  ஏன்? மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் 
   நோய்களின் பிடியில் இருந்து பூரண விடுதலை பெற இயலாதது ஏன்?
   பால் பரிபூரண உணவென்றால் பரம்பரை பரம்பரையாக அதைச்சாப்பிட்டும்,
   நாட்பட்ட பல வியாதிகள் பட்டியலில் இடம்பெறக்காரணம் என்ன?
   எது உண்மை?  ஆய்வோம், அறிவோம், உணர்வோம், உயர்வோம்.
    
          

எண்ணெய் . . .

     
வியத்தகு எண்ணெய் மக(ரு)த்துவம்

  * ஆம் வியப்புத்தரும், சுறுசுறுப்புத்தரும்,           விறுவிறுப்புத்தரும், வனப்புத்தரும் வெறுப்பு 
மாறி விருப்புத்தரும்ஒரேமகத்துவ மருத்துவமே   ஆயில்புல்லிங் எனும் எண்ணெய் மருத்துவம்.
எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு  
  விடியற்காலையே ஏற்றதாகும். அதுவும் 
  காலை  உணவுக்கு முன்னர், பல் தேய்த்த 
  பின்பு செய்வதே சிறந்தபலன்தரும்.
 * நோய்கள் விரைவில் நீங்கவேண்டுமாயின்,
   நாள்தோறும் ஒவ்வொருவேளை உணவுக்கு 
   முன்பும், மூன்று வேளைகளும் ஆயில்புல்லிங்    செய்யவேண்டும்.
  * ஆரம்பத்தில் (புதியவர்கள்) ஒரு வேளை 
    மட்டும் செய்தால் (குறைந்தது 21நாட்கள்) 
    போதுமானது.
  * தூய்மை செய்யப்பட்ட(ரீஃபைன்ட்)சூரியகாந்தி   எண்ணெய் (அ) நல்லெண்ணெய்(எள்எண்ணெய்)
  (அ)தேங்காய்எண்ணெய் இவற்றில்     ஏதாவதொன்றை இரண்டுதேக்கரண்டி அதாவது   பத்துமில்லிலிட்டர் மட்டும் வாயில் 
  விட்டுக்கொண்டு(விழுங்கக்கூடாது) அதிகம் 
  சிரமமில்லாமல், மெதுவாக வாய்முழுவதும் 
 கலந்து திரியும்படி(10முதல்20நிமிடங்கள் வரை )  கொப்பளித்து பின்உமிழ்ந்துவிடவேண்டும்.          

Sunday 27 April 2014

16 பேறுகள்

                
                     பதினாறு செல்வங்கள் 

 * 1. கலையாத கல்வி, 
    2. குறையாத வயது, 
    3. கபடுவாராத நட்பு, 
    4. குன்றாத வளமை, 
    5. குன்றாத இளமை, 
    6. நோய்வாராத ஒழுக்கவாழ்வு, 
    7. வைராக்கிய மனம்,
    8. அன்புஅகலாதஇல்லாள், 
    9. அறிவாற்றல்,ஒழுக்கம்,ஆயுள் தவறாதகுழந்தைகள்,
   10. புகழைப்பற்றி கவலையற்றநிலை,
   11. பச்சோந்திபோல நிறம் மாறாத பண்பு, 
   12. சுயநலமற்ற பரோபகாரம்,
   13.பேராசையில்லாத பணம்,
 14. உண்மை, நேர்மை, வாய்மை தவறாத ஆட்சி,
 15. நல்ல வழிகாட்டிகளை தேர்வுசெய்தல், 
16. மனதை ஓர்நிலைப்படுத்தும் தன்மை  

Saturday 26 April 2014

சத்து நீர்


              
    *  வெந்நீரானது, மருத்துவ குணங்கள் நிரம்பிய நீர் என்று
        சொல்லப்பட்டாலும், தொடர்ந்து குடிநீராகவே குடிப்பதற்கு
        ஏற்றதல்ல. அவ்வாறு வெந்நீரையே தொடர்ந்து குடிநீராக
        பயன்படுத்தவேண்டுமானால், நீரில் உள்ள மாசுக்களை
        நீக்க, நீரைக்கொதிக்கவைக்கவேண்டும்.  பின்னர் கொதிக்க
        வைக்கப்பட்ட நீரை ஆறவைத்து, மண்பானையில் ஊற்றி,
       குறைந்தது மூன்றுமணிநேரம் , அதிக பட்சம் ஏழுமணிநேரங்கள்
       வைத்துப்பிறகு பயன்படுத்தலாம். அப்போது இழந்த 
       பிராணவாயுவையும் மற்றும் இதர சத்துக்களையும் 
       மண்பானையானது  காற்றிலிருந்துபெற்று  நீருக்குத்
       த்ந்துவிடுகின்றது.  

     

தண்ணீரா? வெந்நீரா?

                  
                  தண்ணீரா? வெந்நீரா? 

  *   குடிநீராக தண்ணீரா? வெந்நீரா?  எதுசிறந்தது, என்ற கேள்வியும்,
       இது தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்துவருகின்றன. நீரை
       கொதிக்கவைப்பதினால், நீரானது அதன் இயல்புத்தன்மைகளில்
       மாறுபாடுகளை அடைகின்றது. வெந்நீரில் பிராணவாயுவின் 
       விகிதம் மிகக்குறைந்தே காணப்படுகின்றது. வெந்நீர் என்பது,
       இறந்துவிட்ட நீராகும்.

 *   வெந்நீருக்கு இயல்பாகவே செரிமான மண்டலத்தைத்தூண்டக்கூடிய
     சக்தி உள்ளது. இதனாலேயே செரிமானக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு
     வெந்நீர் பரிந்துரை செய்யப்படுகின்றது. மனிதனின் மொத்த எடையில்
     65 சதவிகிதம் நீர்மட்டுமே உள்ளது. எனவே மனிதனுக்கு ஏற்படும்
    பெரும்பாலான நோய்களைத்தண்ணீரின் மூலமாகவே தீர்த்துவிடமுடியும்.

Friday 25 April 2014

ஹிப்னோ தெரபி . . .


            

                        ஹிப்னோ தெரபி . . .

 *  நம் வாழ்க்கையில் நடந்த சில கொடிய, அவலமான, அவமானத்தை
    ஏற்படுத்திய, அருவருப்பான, ஏமாற்றத்தை அளித்த சம்பவங்களை
    நம் நினைப்பிலிருந்து, மனத்திலிருந்து களைபிடுங்கி எறிவதைப்போல
    எறிந்துவிட்டால் வாழ்வு, சீரும் சிறப்புமாய் மாறிமலர்ந்திடும்.
    இது ஹிப்னோ தெரபியில் முடியும். இறந்துபோன பிரேதத்தைச்
    சிலமணிநேரத்திலே `தூக்கு தூக்குஎன்றுசொல்லி எடுத்துப்போகச்
    சொல்லிவிடுகிறோம். ஆனால் இறந்துபோன நம் `பிரேத  எண்ணங்களை,
    சம்பவங்களை வாழ்நாள் முழுவதும் விடாப்பிடியாகக்கட்டிவைத்துக்கொண்டு
    திண்டாடுகின்றோம். இது என்ன மடமை? இதனை எத்தனைபேர்
    சிந்தித்துப்பார்க்கின்றோம்.   

மறதி . . .



                       

                                   மறதி அவசியம் . . .
  
  * சிலநேரங்களில் சிலமனிதர்களுக்கு  மறதி அத்யாவசியமாகின்றது.
    
அவர்களின் உள்ளத்தை செல்லரிப்பதுபோல்,  

அவர்களது நினைவுகள் அரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு 

வேண்டியது மறதி. மறதித்தன்மையை அவர்களுக்குக்கொடுத்தால்  

குறைபாடுகளிலிருந்து விடுபட்டுத்தெளிவு அடைவார்கள்.இதற்கான 

உபாயமே . . .  

                  ஹிப்னோதெரபி.

Wednesday 23 April 2014

மகிழ்வான வாழ்வு


  மகிழ்வான வாழ்வு 






1.ஆரோக்கியம், பொருளாதாரம், லட்சியம்   -இவைகளில் வெற்றிபெற.

 2.தேர்வுபயம்,பதட்டம் ,மறதிநீங்க --


3.ஞாபகசக்தி ,நோய்எதிர்ப்புசக்தி அதிகரிக்க ---


4.உறக்கமின்மை ,அதீத உறக்கம் போக்க ---


5.தீயபழக்கங்களிலிருந்து விடுபட ---


6.உடல்பருமன் போக்கி வலிவும் வனப்பும் பெற --


7.தோல்வி, தாழ்வு மனப்பான்மை நீங்க ---


8.தன்னம்பிக்கை பெருக --


9.வீரியம் எழுச்சி பெற ---


10.மனமாற்றமும், குணமாற்றமும் பெற --


11.தடுமாற்றம்  தடமாற்றம் 


12.பிறவிக்குறைபாடுகள் காரணம் ,தீர்வு (ஓர் ஆய்வு ).


13.தோஷங்களும் போக்கும் வழிகளும் --


14.நேற்று,இன்று, நாளை  தெரிய,தெளிய,                                                           உணர ,உயர --


15.எல்லாக்காலங்களுக்கும், காரியங்களுக்கும் மாற்றமான, ஏற்றமான   பலன்களைப்பெற ----

                                  
 தொடர்புக்கு -- அறிதுயில் ஆசான் 
ஹீலர் வடிவேலன் - 9843016719 - 9585516719
                                                                                 

ஹிப்னோ ஸ்டார்


                                                 
                                              
                                             

           






                                                                   

புதுக்க(வி)தைகள்


                                         
                  புதுக்க(வி)தைகள்
  
* தூங்காப்பொம்மை             * அவசர ஊர்தி 108..!     

பொம்மைக்கு தூக்கமில்லை           வேகத்தால் ஆபத்து

குழந்தை கதைசொல்லாததால்!        ஆபத்தால் வேகம்

                                      அவசர ஊர்தி..!

* ஹைக்கூ                           * அறிவுரை

   
  வீட்டை                               வேகத்தடை 
சுத்தப்படுத்தும்போது                   அவசியம்தான்!
 சிதைந்துபோனது                    விரைந்து செல்லும்

சிலந்தி கட்டிய வீடு!                   வாகனங்களுக்கு

                                        மட்டுமல்ல,

                                      தறிகெட்டு ஓடும்
                                      இளமைக்கும்தான்... 

Total Pageviews