Thursday 3 April 2014

நகைச்சுவைகள்


            

      நகைச்சுவைகள்

* டாக்டர் - காலுக்கு தலையணை வச்சுப்படுத்தீங்கன்னா!
  உங்க கால்வலி குறைய வாய்ப்பு இருக்கு!!
  பேஷன்ட் – எங்க ஆபீஸ்ல  அந்த வசதியல்லாம்
  கிடையாது டாக்டர்.
* ’’இதுக்கு முன்னால் யார்கிட்ட காண்பிச்சீங்க?’’
   ’’டாக்டர் சுகுமார்கிட்ட!’’
   “அவர் ஏதாவது முட்டாள்த்தனமா சொல்லியிருப்பாரே!’’
   “ஆமாம் டாக்டர். உங்ககிட்ட காண்பிக்கச்சொன்னார்!’’ 
* ஒருவர் – தூக்கத்துல நடந்த உங்கபையன்,
   கல்யாணத்துக்கு பின்னால எப்படி இருக்கான்?
   மற்றொருவர் – துக்கத்துல நடக்கிறான்.
* ஆசிரியர் – ’’ஏண்டா! நான் வரும்போது மட்டும்
   கண்ணாடி போடுற?’’
   மாணவன் – டாக்டர்தான் தலைவலி வரும்போதுமட்டும்
   கண்ணாடி போட சொன்னாரு!’’
   

No comments:

Post a Comment

Total Pageviews