Wednesday 9 April 2014

ஆழ்மன அற்புதங்கள்

                                      ஆழ்மன அற்புதங்கள் 

*   ஆழ்மனம்  தனக்கு இடப்படும் கட்டளைகளை, எவ்விதமறுப்போ,
         எதிர்ப்போ இன்றி, காரணம் கேட்காமல்  சொன்னதைச்சொல்லியபடி 
         செய்துமுடிக்கும்தன்மை  உடையது. சொன்ன எதையும் செய்துமுடிக்கும் 
         வல்லமை உடையது. 
           
       உடலிலே சாதாரணமாக  நம் உணர்வுக்குக்கட்டுப்படாது, இச்சைக்கு 
        அப்பால் இயங்கும்  உறுப்புக்களை, அவயங்களை  வேண்டியபடி 
         இயங்கச்செய்யும் இயல்பு  ஆழ்மனத்திற்கு உண்டு. நம் இஷ்டப்படி 
         இருதயத்தையோ, இரைப்பையையோ  இயங்கச்செய்யமுடியாது.
        ஆனால் உள்ளுறுப்புக்கள் எல்லாவற்றின்  இயக்கம், செயல் 
        அனைத்தையும்  கட்டுப்படுத்தும்  சக்தி  ஆழ்மனத்திற்கு உள்ளது.            
     
      ஆழ்மனம் உலகோடு  தொடர்புகொள்ள, ஐம்புலன்களின் உதவியை 
        நாடுவதில்லை .அது கண்ணின்றி பார்க்கும் ;காதின்றி கேட்கும்  ;
        தோலின்றி ஸ்பரிசிக்கும் ;தட்பம் ,வெப்பம்,நோவு முதலிய உணர்சிகளை 
        தொடாமல் உணரவல்லது .ஆழ்மன இயக்கத்திற்கு உடல் தொடர்பு 
        தேவையில்லை .
                                                                                                   அறிதுயில் ஆசான்  

No comments:

Post a Comment

Total Pageviews