Wednesday 23 April 2014

அறிவுக்கு விலை ....

                       அறிவுக்கு விலை அதிகம்  ( 2 )



      
 சிவாஜி, அந்தப்பணியாளனிடம், ``வாசலில் ஏதோசத்தம் கேட்கிறது,  
  போய் பார்த்துவா,’’ என்றார்.

 இவன் போனவேகத்தில் திரும்பிவந்தான்.

``ராஜா!ஒருயானைபோய்க்கொண்டிருக்கிறது,வேறொன்றுமில்லை,’’என்றான்.

 ``அது என்ன யானை?’’ என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய்வந்து, ``ஆண்யானை மகராஜ்’’ என்றான். ``அதன் விலை எவ்வளவாம்?’’  என்றதும், திரும்பவும் யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன். இப்படி 
ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று. சிவாஜி, அடுத்த பணியாளனை அழைத்தார். `` வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. என்ன ஏதென்று பார்த்துவா,’’ என்றார்.

அவன் ஓடினான். சற்றுநேரத்தில் திரும்பிவந்தான். ``மகராஜ்! அங்கே ஒரு ஆண்யானை போகிறது. அது மிகுந்த லட்சணம் வாய்ந்தது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடியிருக்கும். விலை ஆயிரம் பொன்பெறும்.’’ என்று விபரமாக எடுத்துரைத்தான்.

சிவாஜி, முதல் பணியாளனை ஒரு பார்வைபார்த்தார். அதன்பிறகு அவன் அவரிடம் கூலிபற்றி வாய்திறக்கவேயில்லை.     

No comments:

Post a Comment

Total Pageviews