Thursday 10 April 2014

எண்ணங்கள்

                        எண்ணங்கள்  
ஒருவன் காட்டிலே வேட்டையாடிவிட்டு மிகவும் களைத்துப்போய்
ஒரு மரத்தடியில் வந்தமர்ந்தான். களைப்பின் மேலீட்டால் தரையில்
படுத்துக்கொண்டான்.
‘இந்தக்களைப்புத்தீர ஒருகட்டில் இருந்தால் நன்றாயிருக்கும்என்று
 ஒருசிறு ஆசை உதித்தது. உடனே அவன் கட்டில்மேல் படுத்திருப்பதை கண்டான். இதில் ஒரு மிருதுவான படுக்கையும் தலையணையும் இருந்தால், சுகமாயிருக்கும் என்ற எண்ணம் அடுத்து உதித்தது. உடனே படுக்கையும் தலையணையும் வந்துவிட்டன.  இந்தக்களைப்புத்தீர ருசியாக உணவு இருந்தால பசிதீரும் என்றுநினைத்தான்.அதையும்பெற்றான். இவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டான்.
 உடனே ஒரு குருட்டுச்சந்தேகம் வந்துவிட்டது. உடலுக்குப்புற்றுநோய்
 எப்படியோ, அப்படியே மனதுக்குச்சந்தேகம். ‘புலி வந்தால் என்ன
 செய்வது? நம்மைத்தின்றுவிடுமே?என்றபயம் அவன்மனதில்புகுந்தது.
 புலியும் வந்தது. அவனையும் அடித்துத்தின்றது. ஏனென்றால் அவன்
 அமர்ந்திருந்தது. கற்பகவிருஷத்தின் கீழேயாகும்.

இந்தக்குட்டிக்கதையில், நல்லபடிப்பினை அடங்கியிருக்கின்றது.
 சொல்லப்போனால் நாம் எல்லோருமே கற்பக விருஷத்தின் கீழ்தான்
 அமர்ந்திருக்கின்றோம். இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Total Pageviews