Sunday 30 March 2014

மெஸ்மரிஸம்

                
   மெஸ்மரிஸமும் – ஹிப்னாடிஸமும்  ( 1 )
*மெஸ்மரிஸத்திற்கும், ஹிப்னாடிஸத்திற்கும் அதிக
  வேறுபாடுகளில்லை. இரண்டிலுமே ஆட்படுபவரின்
  வெளிமனத்தை உறங்கவைத்து, ஆழ்மனத்தை
  செயல்பாட்டுக்குள்ளாக்குவதே நிகழ்த்தப்படுகிறது.
*கைகளிரண்டையும் மேலிருந்துகீழாகவும், கீழிருந்து
  மேலாகவும்அசைத்து, தனது காந்தசக்தியால்
  ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்கி, பிணியாளரின்
  வலிகளையும், வேதனைகளையும் போக்குவதும்,
  மேலும் நோயாளியை, ஒளிமிக்க பொருளைக்கண்களின்
  எதிரே காட்டிப்பார்க்கச்செய்தோ, அல்லது சிகிச்சை
  செய்பவரே சிகிச்சை பெறுபவரின் கண்களை உற்று
  நோக்கி, ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்குவதும்
   மெஸ்மரிஸமாகும்.
*ஆஸ்திரியநாட்டைச்சேர்ந்த ஃப்ரெடரிக்ஆண்டன்மெஸ்மர்  
(1733 - 1815) இவரே இக்கலையின் தந்தை எனப்போற்றப்படுகின்றவர்.

No comments:

Post a Comment

Total Pageviews