Saturday 24 May 2014

பரம்பொருள் . . .

          உண்மையான குருத்தன்மை . . !

*  தன்னை உணர, தன்னில் மலர உதவும் பலவிதமான வினாக்களுக்கு
    சமயம், சடங்கு, கடவுள் என்றெல்லாம் காரணம் காட்டாமல், சிந்தனை,
   ஆய்வு இரண்டை மட்டுமே துணைகொண்டு விளக்கும் தகுதி.
எந்தவிதமான மதம், நம்பிக்கைகளாலும் தன்னைக்கட்டுப்படுத்திக் 
   கொள்ளாமை. மற்றும் பிறரையும் அவற்றால் கட்டுப்படுத்தாத தன்மை.
* அதிகார நிலையில் எதையும் உரைக்காத தன்மை. மற்றும் உண்மையை   
   அனுபவிக்கவேண்டும் என்பதைத்தவிர வேறு எந்தவித உபதேசங்களையும்
   கூறாத தன்மை.
* உண்மையான குருத்தன்மையை அறியவும், உணரவும்,உணர்ந்து பரம்பொருளை அடையத்தேவையானதும் ஒன்றே ஒன்றுதான் - சூன்யமான மனம் மட்டுமே அது.
* ஒரு காகிதம் வெற்றுப்பக்கமாக இருந்தால்தான் அதில் ஏதாவது எழுத 
 முடியும். ஏற்கனவே அக்காகிதம் எழுத்துக்களால் நிறைந்திருந்தால், அதில் 
 எவ்வாறு  எழுத இயலும்?   
* நம்மை பல நம்பிக்கைகள் சூழ்ந்திருந்தால், ஆதிக்கப்படுத்தியிருந்தால்
  அத்தளைகளிலிருந்து விடுபடுவதே, நமதுமுதல் காரியமாய் இருத்தல் 
  வேண்டும். 
* பலவகையான நம்பிக்கைத்தளைகளில் இருந்து விடுபட்ட மனமானது, நிர்மலமாயிருக்கும். அதில்தான் பரம்பொருள் உதயமாகும். அப்போதுதான் அதை உணரவும் முடியும். உயரவும் முடியும்.
    

No comments:

Post a Comment

Total Pageviews