Saturday 24 May 2014

அறிவுடையோர்க்கு . . !

                                 அறிவுணர்வோம்

*  சமூகம் என்பது என்ன? அது உயர்ந்த பண்போடு விளங்குகிறது  எனக் 
   கொள்வதற்கு என்ன வழி? சமூகத்தைக்கூட்டி அறிவுரைகளை  வழங்கு
   வதாலா? அப்படி அதன்மூலம் மாறும் என்றால், எவ்வளவு அறிவுரைகளை 
   எவ்வளவுபேர்  உதிர்த்திருக்கிறார்கள். பயனில்லையே. ஏன்? சமூகம்  என்ற 
  ஒன்று தனியாகக்கிடையாது. நீங்களும் நானும் சேர்ந்துதான்  சமூகம் 
  ஆகிறோம். நம் கும்பலில்  ஒருமனிதன் அறிவு பெற்றாலும், இந்த  சமூகம் 
  அந்த அளவிற்கு முன்னேறுகின்றது. பாதிப்பேர் பண்புடையவர்களானால்,
  பாதி சமூகம் உயர்ந்துவிட்டது. அவ்வளவுபேரும்  உண்மையை  உணர்ந்து 
 விட்டால், அந்த முழுசமூகமுமே  மேன்மையாகிவிட்டது என்று கொள்ளலாம். ஒரு சமூகத்தைச்சீர்திருத்த, சமூகத்தை  வைத்து  ஒன்றும் 
செய்யமுடியாது. மக்களே செவிசாயுங்கள்  என்ற பிரசங்கங்கள்  பயனற்றது.
தனி ஒருவன்  தன்னையே  தானே  உயர்த்திக்கொண்டால், அந்த சிறு  அளவு 
 சமுதாயம் உயர்வடையும். இப்படி  ஒவ்வொருவரும், தன்னைத்தானே 
உயர்த்திக்கொள்ளவெண்டுமேதவிர, பிற கூட்டுவழிகள்  உபயோகப்படாது. 
வெறும் பிரசங்கங்களைகேட்பதனால் மட்டுமே  உயரமுடியாது. அவ்வுண்மைகளை நம் அனுபவமாகப்பெறவெண்டும்.      

No comments:

Post a Comment

Total Pageviews