Thursday 15 May 2014

மணித்தக்காளி . . .

             மணித்தக்காளி  இலைச்சாறு 

*  மணித்தக்காளி, சுக்கட்டி இவை  இரண்டும் ஒன்றே. இதில்  கருப்பு, சிவப்பு 
    ஆகிய  நிறங்களில்  பழங்களைத்தரும் வகைகளுண்டு.
   இரண்டின் இலைகளும்  ஒரே தன்மை கொண்டவைதான். இதன்  
   இலைகளை  அம்மியில்  வைத்து  அரைத்து  நீரில்  கலந்து  பிழிந்து
   வடிகட்டிக்கொண்டால் சாறு  கிடைத்துவிடும். 
  இதன்சாறு சற்று  காரமாகவும், கசப்பாகவும்  இருப்பதால்  சிறிதளவு  
  தேங்காய்நீர் ( அ ) இளநீர் ( அ ) தேன்  கலந்துகொண்டால்  சாப்பிட  எளிதாக 
  இருக்கும்.  
  இலையைச்சமைத்து ( அ ) பச்சையாகச்சாப்பிடுவதைவிட சாராகக்      
  குடிக்கும்போது  பலன்  விரைவில்  கிடைக்கும்.

  பலன்கள் :< 
    மணித்தக்காளி இலைச்சாறு வாய்ப்புண்ணுக்கு  இது  சிறந்த  மருந்தாகும். 
    மட்டுமல்லாமல், வாய்ப்புண், வயிற்றுப்புண்,குடற்புண்  மற்றும் எந்தப்
    புண்ணையும்  எளிதில் ஆற்றும்.    
   வாயில்  புண்கள்  வருவது, வயிற்றில்  புண்கள் இருப்பதற்கான
   அடையாளமேயாகும். 
    தோலில்  வெண்மை நிறம் உள்ள  வியாதிகளுக்கு ( சோரியாசிஸ்,
    வெண்குட்டம்)  நல்லமருந்து. இச்சாற்றினை  மேலேயும் பூசலாம்.
   இருமல், சளி, கபம்  ஆகியவற்றை  நீக்குவதற்கு சுக்கட்டி  இலைச்சாறு 
    மிகவும்  பயனுள்ளது.
   

No comments:

Post a Comment

Total Pageviews