Monday 19 May 2014

உணர, உயர . . . !

                                 உணர, உயர 

 * நமது உடல் நலக்கல்வி ஆராய்ச்சிகளிலேயே  மூழ்கிக்கிடப்பதால்,
    உடலோம்பல்  என்பது, வெறும் பரிசோதனைகளிலேயே
   நின்றுவிடுகின்றது. உடல்நலம்  என்பது ஒரு வியாபாரப்பொருளல்ல!
   அது  விலைகொடுத்தாலும்  வாங்கமுடியாத ஒன்று. சிறந்த உணவு, 
   தேர்ந்த வாழ்வு, முறையான பயிற்சி இவைகளால் மட்டுமே  பெறவும், 
   கட்டிக்காக்கவும் முடியும். 
   வந்த நோய்க்கு மருத்துவம் , அதுதான் இன்றைய மருத்துவம். ஆனால் 
   வருமுன் காப்பதே இயற்கை மருத்துவம். அதுவே இயற்கையின் 
   மகத்துவம். நோயோடு போராடுவது  அதன் நோக்கமல்ல. கிருமிகளைக்
   கண்டு  அஞ்சுவது  அதன் பழக்கமுமல்ல. நோய்த்தடுப்பு - நோய் ஒழிப்பு -
   நோய் எதிர்ப்பு  இதுதான் அதன் முழக்கம். 
   இதற்கெல்லாம்  ஆதாரமான ஐம்பெரும் ( நிலம்,நீர்,நெருப்பு,காற்று,விண்)
   பூதங்கள்தான்  இதற்கு விளக்கம். நோய்  என்பது தானே நம்மைத்தேடி 
   வருவதில்லை. தவறான உணவு - வாழ்க்கை - சிந்தனை  இவைகளின் 
   மாறுபட்ட  விளைவுதான் அது.
   உடல்நலம்  என்பது  ஒளியைப்பொன்றது. நோய்  என்பது  இருளைப்
  போன்றது. இருளை அகற்றவும், ஒளியை ஏற்றவுமான எளிய  வழிகளே 
  முறையான உணவு - முயற்சி - பயிற்சி. இதன்மூலம்  நலம்  என்ற  ஒளி 
  உண்டானால், நோய்  என்ற  இருள் தானே மறைந்துவிடும். இதை 
  உணர்வோம், உயர்வோம்.    
      

No comments:

Post a Comment

Total Pageviews