Tuesday 13 May 2014

ஜெய்ஹிந்த் . . . . . . !

                                   ஜெய்ஹிந்த் . . . . . . !                                 


*  நம் தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல், பொருள், ஆவி  அனைத்தையும்  வழங்கிய தியாகசீலர்கள்  பலர் உண்டு. அவர்களில்ஆங்கிலஆட்சியாளருக்குத் தெரியாமல்  அயல்நாடுகளுக்குச்சென்று 
 இந்திய விடுதலைக்கு, ஆதரவு திரட்டியவர் . . . . . . !

*  1891-ம்  ஆண்டு  செப்டம்பர் மாதம்  15-ந்தேதி,     திருவனந்தபுரத்தின்  ஒரு  பகுதியான  புத்தன்சந்தை 
 என்னுமிடத்தில், திரு.சின்னசாமி, திருமதி. 
நாகம்மாள் ஆகியோருக்கு மகனாகப்பிறந்தவர். . . . . . !

 *  இளமையில் ஏட்டுப்படிப்பிலும், விளையாட்டிலும் 
    மிகச்சிறந்து விளங்கியவர். சிலம்பம, வாள்வீச்சு 
     போன்ற வீரக்கலைகளில்  ஆர்வம் காட்டியவர். . . . . . . ! 

*   திருவனந்தபுரம் மன்னர்  உயர்நிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு  படித்துக்
     கொண்டிருக்கும்போதே , தன்னுடன் பயின்ற மாணவகளைசேர்த்துக் 
     கொண்டு  `ஸ்ரீ  பாரதமாதா வாலிபர்  சங்கம் ' ஏற்படுத்தி  ` வந்தேமாதரம் '
      என  முழங்கியவர். . . . . . !

 *  `ஜெய்ஹிந்த்' முழக்கத்தை  ஏற்படுத்தியவர். 1914-ல் 2-ம் உலகப்போர்       
      மூண்டபோது , இங்கிலாந்து கடற்படையைக்கலங்கவைக்க ஜெர்மனி
      பயன்படுத்திய நீர்மூழ்கிக்கப்பல்களில்  ஒன்றான எம்டன் என்ற பெயர் 
      கொண்ட நீர்மூழ்கி கப்பலில் , உதவி பொறியாளராக பொறுப்பேற்றவர்.

*    இந்தியரைத்தாழ்த்தி பேசியதற்காக, ஹிட்லரை எழுத்துமூலம் மன்னிப்பு 
      கேட்கச்செய்தவர் , `ஜெய்ஹிந்த்' செண்பகராமன் . ( 1891-09-15 /1934-05-26 )                                

No comments:

Post a Comment

Total Pageviews