Wednesday 19 November 2014

உயிர்மொழிகள்..!

                                                                   
* ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதுபோல நம்பிக்கையுடனும்,
    நாளைக்கே சாகத்தயாராக இருப்பதுமான வாழ்வே, துணிவான,
    உண்மையான, முழுமையான வாழ்வாகும்.
 
* அரிதான மானிடப்பிறவியில் ஆரோக்கியமே ஆதாரமானது.
   அதுவே முதலிடம் வகிக்கின்றது. நமது உடல் ஆரோக்கியத்திற்கே
   நாம் முதலிடம் கொடுக்கவேண்டும். உடல்நலம் கெட்டால் மனநலம்
  கெடும்.(ஒரு நாளில் அரைமணிநேரம் வலிவும், வனப்பும் பெற போதும்.)

 * உடலுக்கு உணவு வேண்டும். உடல் என்ற இயந்திரம் இயங்குவதற்கான
   எரிபொருள்தான் உணவு. பழைய இரயில் எஞ்சினில் நிலக்கரியைக்
   கொட்டுகிறமாதிரி, வாய் வழியே வயிற்றுக்குள் உணவைக்கொட்டுகிறோம்.
   வயிறு ஒரு பாய்லர். அது உணவை எரிபொருளாக மாற்றி நம்மை உயிர்
  வாழ, இயங்கவைக்கிறது. உண்ணும் உணவை, முறையை அறிந்து உடல்
  வளர்ப்போம், உயிர்காப்போம். வாழ்வோம், வாழ்விப்போம். 

      

No comments:

Post a Comment

Total Pageviews