Wednesday 19 November 2014

அளவுகோல் . . . ?



அன்பு . . !
* அன்புக்கு அளவுகோலும் இல்லை. பக்திக்கு கட்டுப்பாடும் இல்லை.
  அன்பு இருக்கிறது என்பதே போதுமானது. அதை ஏன் அளந்து
  பார்க்க வேண்டும்? அன்பு இல்லாதபோதுதான், அதை அளந்து
  பார்க்கும் எண்ணமே எழுகின்றது. அன்பைக் கவனியுங்கள்;
  அளப்பதைக் கைவிடுங்கள்.
* அன்பாக இருங்கள். அன்பு இருந்தால், அது உண்மையான
  அன்பாகத்தான் இருக்கும். போலி அன்பு என்று எதுவுமில்லை.
   அது ஒரு தவறான சொல். அன்பு உண்டு. அல்லது அன்பு இல்லை.
  அவ்வளவே. சோதனை, அளவுகோல், என்ற பேச்சுக்கேஇடமில்லை.
* தங்கத்தை அளக்க, சோதிக்க வழிகள் உண்டு. ஏனென்றால்,
 தங்கத்தில் கலப்படம் உண்டு. அன்பில் பொய்மை இல்லை. கலப்படம்
 இல்லை. அது இருக்கிறது; அல்லது இல்லை, என்பதுதான் உண்மை
 நிலையாகும். அன்பு இருப்பதை நீங்கள் உணர முடியும், செருப்புக்
 கடிப்பதுபோல! செருப்புக் கடித்தால் எப்படி வலிக்கிறது! வலிதான்
 கடியின் அளவுகோல். அதற்கு வேறு சோதனை அவசியமில்லை.
* வேதனை அனுபவிக்க சோதனை தேவையா? வேதனையே ஒரு
  சோதனைதானே? ஒன்று வலிக்கும். அல்லது வலிக்காமலிருக்கும்.
  ஆனால், உள்முகமாகத் திரும்பி நமக்குள்ளே ஊடுருவிப்பார்க்க

  நமக்குப்பயம். மற்றவர்களின் அன்பைப் பற்றியதுதான் நம் கவலை.

No comments:

Post a Comment

Total Pageviews