Monday, 1 December 2014

. . . . யுக்திகள்!

                 
உ(ய)ரிய யுக்தி . . !
* எண்ணம்போல் வாழ்வமைய, நல் எண்ணங்களை நமக்கேற்ப முறையாக
    வடிவமைத்து, அதனை நம் ஆழ்மனத்தில் பதிய வைப்பதே சிறந்த வழி.
    அதற்கு ஒரு மயக்கம் தோய்ந்த, முழு உறக்கமுமல்லாத, விழிப்புமல்லாத
    நிலைக்குள் நுழைவதே எளிய வழியாகும். இவ்வாறே ஆழ்மனத்திற்கு 
    அமைதியாகவும், சலனமின்றியும் , நம் எண்ணங்களை, ஏற்றுக்கொள்ளும்
    விதத்தில் தெரிவிக்கப்படமுடியும். பதிவிக்கப்படமுடியும்.

ஆழ்மனத்தில் ஒரு எண்ணத்தைப் பதிய வைப்பதற்கான  எளிய வழி,  பதிய
    வைக்கப்பட வேண்டிய  எண்ணத்தை,  எளிதாக  நினைவில் வைத்துக்
   கொள்ளக் கூடிய  அளவிற்கு ஒரு சிறிய சொற்றொடராகச் சுருக்கித் 
    தொகுத்து,  ஒரு தாலாட்டைப்போல  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து 
     கூறிக்கொண்டிருப்பதே  உகந்ததாகும்.

No comments:

Post a Comment

Total Pageviews