Monday 2 November 2015

உ(ய)ரிய மாற்றம் ...


   எளிமை           புதுமை           முழுமை
          
                     Hr.கா.வடிவேலன் (அறிதுயில் ஆசான்) 
        நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை
                * பேசி :< 98430 16719 – 95855 16719 *

  * எனக்கு கிடைக்கவேண்டும் என்பது `ஆசை’ - அது
   கிடைக்காமல் எனக்கு வாழ்வு இல்லை என்பது
   `லட்சியம் அதற்காக நான் முயற்சி செய்கிறேன்,
   அது நிச்சயம் கிடைக்கும் என்பது – `நம்பிக்கை’!

*  கடல் முழுவதும் தண்ணீ ர் இருந்தாலும், அந்நீர்
   கப்பலுக்குள் புகாதவரை கப்பல் அமிழ்ந்து போவது
   இல்லை. அதேபோலத்தான் பயமும்! மனம் என்கிற
   கப்பலுக்குள் சஞ்சலம், பயம், பீதி, திகில், சந்தேகம்
   போன்ற ஓட்டைகள் ஏற்படாதவரை எந்த உலகப்
   பிரச்சனைகளும் (உள் – வெளி) நம்மை எதுவும்
   செய்ய இயலாது!

*  ``பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப்
    பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’’  - பாரதி –
    பயம் கவலையாய் மாறும்; கவலைப்படுபவர்கள்,
    பிறரது கவனத்திற்காக, பாதுகாப்பிற்காக,
    அரவணைப்பிற்காக ஏங்குபவர்கள்!

 *  பயம், கோபம், கவலை போன்றவை அதிகம் 
   உள்ளவர்களுக்கு, அவ்வுணர்ச்சிகளானது, தோல்,
   எலும்புகள் மற்றும் தசைகளையும் இறுக்கி
   சுவாசத்தையும் தடைபடுத்துகின்றது. கோபம்
   அடைகின்றவர்களின் முகம் சிவப்பதோடு
   இரைப்பையும் சிவக்கும்; உணர்ச்சி வசப்படும்
   போது இரைப்பை சுருங்கி விரியும்; பயம்
   கொள்ளும்போது இரைப்பை வெளுத்து விடும்!
  
* `` ஒவ்வொரு நாளும் எல்லாவகையிலும் நான்  
    மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே 
   இருக்கின்றேன். அதனால், நான் இன்னும்
               சிறப்படைகின்றேன் !
 (இதனை தினமும் காலை எழுந்ததும், கண்ணாடி
     முன் அமர்ந்தவாறு ``10நிமிடமும், இரவு
  உறங்கும் முன்னர் ``10நிமிடமும் மனத்துள் (அ)
  மிதமாக வாய்விட்டோ, குறைந்தது ``21’’ நாட்கள்
 கூறிவர , மனதில் – உடலில் உ(ய)ரிய மாற்றம் நிகழும்!! ) 

No comments:

Post a Comment

Total Pageviews